வணக்கம்

சனி, 30 ஜூலை, 2016

இளைஞர் பெண்ணொருவருக்கு பலாத்கார முத்தம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மணல்குளம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்த பெண்ணொருவருக்கு பலாத்காரமாக முத்தமிட்டுள்ளார்.
அதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தெல்லிப்பளை பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து முத்தமிட்ட இளைஞரை பொலிசார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிவான்
 உத்தரவிட்டுள்ளார்
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,
தெல்லிப்பளை மணல் குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை பெண்ணொருவர் தனிமையில் இருந்த வேளை வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் அந்த பெண்ணுக்கு பலாத்காரமாக முத்தமிட்டு விட்டு வீட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் முத்தம் கொடுத்தமை தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை முத்தம் கொடுத்த இளைஞரை கைதுசெய்து , மல்லாகம் மாவட்ட பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் பதில் நீதிவான் என்.தம்பிமுத்து முன்னிலையில் முற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து நீதிவான் முத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் பிரதி சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் எனவும் உத்தரவிட்டமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>


>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக