நல்லுார்க்கந்தன் பெருந் திருவிழாவுக்கு வருகை தரும் அடியவர்கள் ஆசரசீலர்களாக வரவேண்டுமேதவிர மேலங்கி இல்லாது வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என யாழ்ப்பாண இந்து சமய மறுமலர்ச்சி அமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பண்டைய காலத்தில் பிராமணர்கள் தங்களது அடையாளமான பூநுாலை உடம்பில் போட்டிருப்பர். கோவில்களில் பிராமணர்களுக்கும் ஏனைய பக்தர்களுக்கும் வித்தியாசம் தெரிவதற்காகவே மேலங்கியுடன் ஆண்கள் கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று அந்தக்காலத்தில் கோவில்களில் உத்தரவிட்டிருந்ததாக அறிய முடிகின்றது.
இதையே முட்டாள்தனமாக
கோவில்களுக்குள் மேலங்கியுடன் செல்லக்கூடாது என தற்போதும் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். உலகம் நவீனமயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந் நேரத்தில் நல்லுார் முருகனே தன்னை மின் விளக்குகளால் அலங்கரித்த வௌவீதி உலா வருவதும், மந்திரங்களையும் நாதஸ்வர மேளச்சத்தங்களை
ஒலி பெருக்கியில்
ஒலிபரப்பச் செய்து கொண்டிருக்கும் போது மிகப் பண்டைக்காலத்து புறம்போக்கான ஒரு செயற்பாட்டை தற்போதும் நல்லுாரில் மேற்கொண்டிருப்பது நல்லுார் நிர்வாகத்தின் முட்டாள்தனமான செயற்பாடாகும். நல்லுாருக்கு அருகில் உள்ள வீரமகாகாளி அம்மன் ஆலயத்திற்குள் நல்லுார் முருகனின் திருவிழாவிற்காக
கட்டண வாகனத் தரிப்பிடத்தை
உருவாக்கியுள்ளார்கள். அங்கு செல்லும் சிங்கள சுற்றுலாப்பயணிகள் உட்பட அனைவரும் ஆலயத்தின் முன் பக்கத்தில் செருப்புடனே செல்கின்றார்கள். அத்துடன் அங்கு வைத்து அசைவ உணவுகளைப் பிரித்து உண்கின்றார்கள். இதனைத் தடுப்பதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள எந்த இந்து அமைப்பும் முயற்சி செய்யவில்லை. நாம் அதனைக்
கண்டிக்கின்றோம்.
இவ்வாறான நிலையில் ஒரு சிங்கள சுற்றுலாப் பயணி நல்லுார் ஆலயத்திற்கு வெளியே உள்ள வீதித்தடையைத் தாண்டி நல்லுார் ஆலயச் சுற்றுப்புறத்தினுள் செருப்புடன் செல்ல முற்பட்ட போது அங்கு நின்ற பொலிசார் அவரை செருப்பை கழற்றச் சொல்லியுள்ளார். அதற்கு அந்தச் சுற்றுலாப்பயணி ‘ஏன் கழற்ற வேண்டும்‘‘
எனக் கேட்ட போது
இந்துக் கோவிலுக்குள் செருப்புடன் செல்லக்கூடாது‘ என்ற கட்டுப்பாடு இருக்கின்றது என பொலிசார் சொல்லியுள்ளனர். அப்போது ‘நான் அந்தக் கோவிலுக்குள் செருப்புடன் சென்றேன்‘ என வீரமகாகாளி அம்மன் கோவிலைச் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு கேவலமான நிலையில் உள்ளது எமது கோவில்களின்
செயற்பாடுகள்.
இவ்வாறான நிலையில் நாம் யாழ்ப்பாணம் உட்பட்ட பல இடங்களில் இந்து சமய மறுமலர்ச்சிச் செயற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளோம். நாம் செயற்படுத்தப் போகும் இந்து சமய மறுமலர்ச்சிகளுக்கு இந்து சமயத்தைச் சேர்ந்த அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
தலைவர்
இந்துசமய மறுமலர்ச்சி அமைப்பு.
யாழ்ப்பாணம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>