வணக்கம்

வியாழன், 28 ஏப்ரல், 2016

முகநூல் ஊடாக ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இணையத்தின் ஊடாக சமூக வலையத்தளங்களில் இவ்வாறு ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவிலிருந்து குறித்த நபர் நாடு திரும்பிய போது இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர். முகநூல் ஊடாக இந்த நபர் ஜனாதிபதியை கொலை செய்ய போவதாக எச்சரித்துள்ளார். புலனாய்வுப் பிரவினர் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுபல சேனா...

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

நிதிபதி இஞ்செழியன் புலம்யெர்தமிழ்களை எச்சரிக்கிறார்

வெளிநாட்டில் வாழும் நீங்கள் உங்கள் உறவுகளுக்காக பணத்தை அனுப்புகிறீர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுக்கின்றீர்கள்.அவரகளும் நல்ல தூக்கம் நல்ல சாப்பாடு எந்த கஸ்ரமும் உணராதவர்களாய் வாழ்கின்றனர்… இவர்களின் எதிர்காலம் உங்களால்தான் அழிக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? வேலை தேடாமல் சோம்பேறிகளாக வாழ்வது உங்களுக்கு தெரியுமா? ரவுடிதனம் பண்றது வீதியில் உங்களுக்கு தெரியுமா ?? சிறுவயதில் போதைக்கு அடிமையாகுவது உங்களுக்கு தெரியுமா? இதெற்கெல்லாம்...

புதன், 20 ஏப்ரல், 2016

குவியும் பாராட்டுக்கள் புதிய பொலிஸ்மா அதிபருக்கு !!!

புதிய பொலிஸ்மா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தரவுக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நாட்டில் பெரும்பான்மை மக்களின் நல்ல அபிப்பிராயம்  பெற்ற ஒருவர்  பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை காரணமாக பொதுமக்களின் சிவில் அமைப்புகள் பலவும் புதிய பொலிஸ்மா அதிபருக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன. அத்துடன் இலங்கை வரலாற்றில் வடக்கிலும், கிழக்கிலும் பணியாற்றி அங்குள்ள பொதுமக்களின்...

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

தாயாகப்பெருமைபேசும் இந்தியப்பட்டிமன்றம்

இலங்கைத்தமிழர்களே! இனியாவது புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் யார் உங்களில் வேர் எது. வெளியிலிருந்து வந்தவர்கள் சொல்லித்தான் நாம் யார் என்று அறியவேண்டி உள்ளதே. ஓஸ்லோவில் சில வருடங்களுக்கு முன்னர் பொறுக்கிப் பாப்பணி பாதிரியாக வந்தான் பெயர் செல்லப்பா. இந்தச் செம்மரியை இங்குள்ள பல கிறிஸ்தவப்பிரிவில் ஒரு குழு அழைத்தது. அது யேசுவைக் கடவுளாக ஏற்று சிவஞானபோதத்துக்கு விளக்கம் சொல்லுதாம் . அங்கே  இந்த நாய் உள்ளே  காவியும் வெளியில் லே எனும் கிறிஸ்தவபாதிரி...

புதன், 13 ஏப்ரல், 2016

பஸ் நிலையத்தில் களவெடுத்த பெண் 15 நிமிடங்களில் கைது

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை, 15 நிமிடங்களில் நேற்று திங்கட்கிழமை (11) மாலை பொலிஸார்  கைது செய்தனர். புதுவருட கொள்வனவை முடித்துவிட்டு நண்பிக்காக மேற்படி பெண் காத்திருந்த வேளை, பெண்ணின் பின்பக்கமாகச் சென்ற சந்தேகநபரான பெண், கைப்பையைத் திறந்து பணத்தை  திருடியுள்ளார். அதன் பின்னர், சந்தேகநபரான பெண் தடுமாற்றமடைந்த...

மின்தடை புத்தாண்டு காலப்பகுதியில் கிடையாது ?

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடையறாது மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், புத்தாண்டு காலத்தில் மின்சார விநியோகத்தை துண்டிக்க எவ்வித அவசியமும் கிடையாது. மின்சார விநியோகம் செய்யும் பகுதியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படாது என நம்புகின்றோம். புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான கைத்தொழிற்சாலைகள்...

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

யாழில் தமிழ் புத்தாண்டன்று சுட்டெரிக்கும் வெயில்???

வெப்பத்தின் கொடுமை இப்பொழுதே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புதுவருட தினத்தன்றும், மறுநாளும் தற்போதுள்ள வெப்பநிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று திருநெல்வேலியிலுள்ள  வளிமண்டலவியல்  திணைக்களப் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார். அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சிறுமழை பெய்ய வாய்ப்புள்ளபோதும், அதனைப் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில்...

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

மட்டக்களப்பு பெண் 30 வயதில் பாட்டியான சாதனை'?

பிள்ளைக்கு 14 வயசாச்சு… போன வருசமே கட்டிக் குடுத்திருக்கணும்… பிந்திட்டுது. இன்னும் ஒன்டு ரெண்டு மாசம்தான் எங்களோட இருப்பாள்.. நாங்கள் பிந்தினாலும் அவளா ஒரு துணை தேடிடுவாள்’ என்று மிக சர்வ சாதாரணமாக சொன்னார் ரேவதி வாகரையின் காட்டோர குடியிருப்பொன்றில் வசிக்கும் ரேவதிக்கு இப்பொழுது 31 வயது. தனது இரண்டாவது மகள் இன்னும் திருமணம் முடிக்காமலிருப்பது அவருக்கு பெரும் பதைபதைப்பை கொடுக்கிறதென்பதை அவருடன் பேசும்போது புரிந்து கொண்டோம். 31 வயதிலேயே பேரக்குழந்தையை...

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தம்பதியினர் குளித்துக்கொண்டிருப்பதை எட்டிப் பார்த்தவர்கள் விளக்கமறியிலில்?

துன்னாலை வடக்குப் பகுதியில் இளம் தம்பதியினர் குளித்துக்கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த இருவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார், திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார். இதேவேளை, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள்  சார்பில் ஆஜராகிய  சட்டத்தரணி விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார். இரவு வேளையில் வீட்டு குளியலறையில் இளம்தம்பதியினர் குளித்துக்கொண்டிருந்த போது, அந்தப்...

சனி, 2 ஏப்ரல், 2016

பண்டத்தரிப்பு வயற் கிணற்றில் இருந்து முதலை ஒன்று மீட்பு

பண்டத்தரிப்பு வயற் கிணற்றில் இருந்து முதலை ஒன்று மீட்பு பண்டத்தரிப்பு, நகர்ப்புறத்தின் பின்பக்கமுள்ள வயல் கிணற்றில் தவறி வீழ்ந்த 5 அடி நீளமான முதலை வியாழக்கிழமை (31) மீட்கப்பட்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஐந்து நாட்;களுக்கு முன்னர் இந்த முதலை தவறி கிணற்றுக்குள் வீழ்ந்தது. இது தொடர்பில் அப்பகுதி மக்கள் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு அறிவித்த போதும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மக்கள் இளவாலைப் பொலிஸாரின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு வந்தனர். அவர்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு...

இதோ அறுசுவை சிறந்த கோடை உணவு?

இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத் தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவு வகைகள். மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டு சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும்....