பண்டத்தரிப்பு வயற் கிணற்றில் இருந்து முதலை ஒன்று மீட்பு பண்டத்தரிப்பு, நகர்ப்புறத்தின் பின்பக்கமுள்ள வயல் கிணற்றில் தவறி வீழ்ந்த 5 அடி நீளமான முதலை வியாழக்கிழமை (31) மீட்கப்பட்டு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கொண்டு செல்லப்பட்டது. கடந்த ஐந்து நாட்;களுக்கு முன்னர் இந்த முதலை தவறி கிணற்றுக்குள் வீழ்ந்தது. இது தொடர்பில் அப்பகுதி மக்கள் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு அறிவித்த போதும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மக்கள் இளவாலைப் பொலிஸாரின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு வந்தனர். அவர்கள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இதனைத் தெரியப்படுத்தி, திணைக்களத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகள் முதலையை மீட்டுச் சென்றனர். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருவெம்பாவை
சனி, 2 ஏப்ரல், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







0 கருத்துகள்:
கருத்துரையிடுக