யாழ் மருதனார்மடத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்களை தற்காலிமாக மூட மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சுன்னாகம் பிரதேச சபைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில்
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில் பெரும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இந்த
உணவகங்களின்
உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. 3 உணவகங்களின் உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து 3 உணவகங்களையும் தற்காலிகமாக மூட நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் ஒரு மாத காலத்தில் சகல திருத்தப் பணிகளையும் மேற்கொண்ட பின்னர், சுகாதார பரிசோதகர் அதனைப் பரிசீலித்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் உணவகங்களை மீண்டும் திறக்க முடியும் என தீர்ப்பளித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக