வணக்கம்

வியாழன், 17 மார்ச், 2016

மாயமான விமானங்களகளின் மர்ம பெர்முடா ரகசியம் வெளியானது (காணொளி)

பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது.பேரன்ஸ் கடல் பகுதியில் புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது.
இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாக கண்டு பிடிக்கமுடியவில்லை.
கரீபியன் தீவை சேர்ந்த மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.
பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
முதன் முறையாக பெர்முடா முக்கோண ரகசியம் குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளன.
கடற்பகுதியின் அடித்தட்டில் பெரிய எரிமலை வாய்கள் இருப்பதாக கூறுகின்றனர். இந்த எரிமலைவாய்கள் அரை மைல்கள் பரந்து விரிந்து கிடப்பதாகவும், இதன் ஆழம் சுமார் 150 அடி இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
இதன் காரணமாகவே நார்வே கடற்பகுதியில் அதிக இயற்கை வாயு கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த எரிமலைவாயில் இருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு அப்பகுதிகளில் சிதைவுகளை உருவாக்கி பின்னர் வெடித்துச்சிதறுகின்றது
அதிக எண்ணிக்கையிலான எரிமலைவாய்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுவதால், இவைகள் அளவுக்கு அதிகமான வாயுவை வெளியேற்றுகின்றன. எரிமலைவாய் அடிக்கடி வெடித்துச்சிதறுவதால் அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்துகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்றதொரு காரணங்களால்தான் பெர்முடா கடற்பகுதியிலும் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் நடைபெறும் மாறுதல்கள் பெரும் பனிச்சரிவு போன்றோ அல்லது அணு எதிர்வினை போலவோ நடைபெறுவதாக
 கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி கடல் மீத்தேன் வாயுவுடன் கலந்து கொதிநிலைக்கு வருவதால் கப்பல்கள் மூழ்கியதும் மாயமாகின்றது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் இதனை விஞ்ஞானிகள் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 16 மார்ச், 2016

நான்கு ரவுடிகள்சேர்ந்து வாழ் பாடசாலை சிறுவனுக்கு வெட்டு !

யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் சிறுவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் இலக்கம், போக்குவரத்து திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், ஏனையோரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள மரக்காலைக்குள் பொல்லுகள், கைக்கிளிப்புக்களுடன் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பலொன்று அதே பகுதியைச் சேர்ந்த கே.கேமராஜன் என்ற சிறுவனைக் கடுமையாகத் தாக்கியது. இதன்போது படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 14 மார்ச், 2016

இரண்டு மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து சிறுமி பலி!

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்வேவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்திலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த கட்டடத்தில் சிறுமி மேலும் பலருடன் நின்று கொண்டிருந்த வேளையிலையே கீழே விழுந்துள்ளார்.காயமடைந்த சிறுமி மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 



சனி, 12 மார்ச், 2016

பல்வேறு பிரச்சினைகளால் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள்!

இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை, உடல்நிலை மாற்றம், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெண்கள் உளநிலை பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பம் தரிப்பதாகவும் அதில் 140 குழந்தைகள் பிறக்கும் போதே இறந்து விடுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் சிறுவயது கர்ப்பிணிகள் 24,000 பேர் பதிவாவதாகவும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </


புதன், 9 மார்ச், 2016

மாணவி கடத்திய எதிரிக்கு கடூழியச் சிறை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, இன்று  தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் 30 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவரை அதிகாலை 3 மணிக்கு கடத்திச் சென்று முல்லைததீவில் வைத்து பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக மார்க்கண்டு செல்வகிருஸ்ணன் அல்லது செல்லப்பா என்ற 3 குழந்தைகளின் தந்தையான 35 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எதிரி பிணையில் விடப்பட்ட நிலையில் இந்தியாவுக்குத் தப்பியோடி அங்கு ஒளிந்து வாழ்கின்றார். இதனால் எதிரியின்றி வழக்கு விசாரணை நடைபெற்றது.

கடத்தல் சம்பவம் நடைபெற்றபோது, அந்த மாணவி 15 வருடங்கள் ஒரு மாத வயதுடையவராக இருந்தார்.

பாதிக்கப்பட்ட இந்த மாணவி தனக்கு நேர்ந்தது என்ன என்பதைத் தனது சாட்சியத்தில் நீதிமன்றத்திற்கு விளக்கிக் கூறினார்.

‘எதிரி, முதலில் என்னை மன்னாருக்குக் கூட்டிச் சென்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்ததன் பின்னர் முல்லைத்தீவுக்குக் கூட்டி வந்தார். அங்க 38 நாட்கள் இருந்தோம். அப்போது அவர் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய  முயற்சித்தபோது, நான் அதற்கு உடன்படவில்லை. அவரை நான் எதிர்த்து நின்றேன். ஆயினும் எனது எதிர்ப்புக்கு மத்தியிலும் 6 தடவைகள் அவர் என்னை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார்.

‘நாங்கள் முல்லைத்தீவில் இருந்தபோது 40 ஆவது நாள் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அயல் வீட்டில் எனது பெற்றோர் வந்து என்னைத் தேடியபோது, என்னை அறையில் இருந்த அலுமாரிக்குள் ஒளிந்திருக்குமாறு எதிரி கூறினார்.

நான் அதற்கு உடன்படவில்லை. எனது பெற்றோரிடம் ஓடிச் சென்றேன். பின்னர், முல்லைத்தீவு பொலிசாரினால் நாங்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம். அங்கு விசாரணைகள் நடைபெற்றன என்று பாதிக்கப்பட்ட பெண் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் சாட்சியமளிக்கையில், பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தினார்.

சம்பவம் நடைபெற்ற அந்த இரவு தமது சகோதரியாகிய அந்த மாணவி தங்களுடன் நித்திரை கொண்டதாகவும் மறுநாள் காலை அவரைப் படுக்கையில் காணவில்லை என்றும் அவர் கடத்திச் செல்லப்பட்டதைப் பின்னர் அறிந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதர சகோதரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் கூறினர்.

வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களை அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி நெறிப்படுத்தினார்.

விசாரணையின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:

பதினாறு வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளையைப் பாதுகாவலரின் அனுமியின்றி அழைத்துச் செல்வது ஆட்கடத்தல் குற்றமாகும். அதேநேரம்,16 வயதுக்குக் குறைந்த சிறுமியை அவருடைய சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ பாலியல் துஷ்பிரயோகம் செய்வது  தண்டனைக்குரிய குற்றமாகும் என தண்டனைச் சட்டக் கோவை கூறுகின்றது.

இந்த வழக்கில் சம்பவ தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு 16 வயதுக்குக் குறைந்த பள்ளி மாணவியை கடத்தி எதிரி ஆட்கடத்தல் குற்றம் புரிந்துள்ளார். அத்துடன் 16 வயதுக்குக் குறைந்த அந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் மூலம் பாலியல் வல்லுறவு குற்றத்தையும் புரிந்துள்ளார்.

விசாரணையின்போது சாட்சியங்களின் மூலம் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய இரண்டு குற்றங்களையும் எதிரி புரிந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எதிரியைக் குற்றவாளியாகக் கண்டுள்ள இந்த நீதிமன்றம் ஆட்கடத்தல் குற்றத்திற்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டமும் கட்டத்தவறினால் ஒர் ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கின்றது.

பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் பாலியல் வல்லுறவு கொண்ட குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் தண்டப்பணமும் கட்டத் தவறினால் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்ச ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும். தவறினால் 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என
இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.

குற்றம் சாட்டப்பட்ட எதிரி இந்தியாவில் இருப்பதாக மன்றில் சாட்சியமளிக்கப்பட்டிருப்பதனால், சர்வதேச பொலிசாரின் ஊடாக அவரைக் கைது செய்யுமாறு பகிரங்கப் பிடியாணை பிறப்பித்து பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடப்படுகின்றது.

அதேபோன்று சார்க் நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கையைப் பாவித்து, இந்தியாவால் உள்ள எதிரியை நாடு கடத்துமாறு இந்திய வெளியுறவு அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்து எதிரியை இலங்கைக்கு நாடு கடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வியாழன், 3 மார்ச், 2016

புதிய பணிப்பாளராக முகுந்தன் யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நியமனம்!

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதிய பணிப்பாளராக திரு. முகுந்தன் அவர்கள் இன்று முதல் பணிப்பாளர் நாயகம் திரு. து. யு. ரஞ்சித் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் அதிபராக கடமையாற்றி வந்துள்ளார்.
வாழ்க்கை திறன் மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்கவும் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் எதிர்வரும் 04.03.2016 அன்று யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நேரடியாக விஜயம் செய்ய இருக்கின்றனர்.
யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி சீராக இயங்க ஒத்துழைத்த முதலமைச்சர் வடமாகாணம், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 
உண்மை நிலையை
 வெளிக்கொண்டு வர பாடுபட்ட இணைய மற்றும் பத்திரிகை செய்தி நிறுவனங்களுக்கும் தமது நன்றிகளை தொழில்நுட்பவியல் கல்லூரி சமூகம் தெரிவித்துக் கொண்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 1 மார்ச், 2016

இருவர் படுகாயம் பதுளை விபத்தில் ஆசிரியயை பலி;

பதுளை உடுவரை தமிழ் வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் பலியானார். அத்துடன் இருவர் படுகாமயடைந்தனர்.
டபிள்யூ.எம்.பிரியலதா (வயது 47) என்ற ஆசிரியையே விபத்தில் நடந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்தையடுத்து மக்கள் வீதிக்கு இறங்கி பஸ்ஸை சுற்றிவளைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து பாதுகாப்புக்காக பொலிஸார் களமிறக்கப்பட்டனர். பாடசாலை முடிவடைந்து வீடு செல்வதற்காக பிரதான வீதியில் காத்திருந்த போது,
 அவ்விடத்துக்கு வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏற முற்பட்டுள்ளார். இதன்போது பஸ்ஸுக்கு 
பின்னால் வந்த லொறி ஒன்று பஸ்ஸூடன் மோதியதையடுத்து ஆசிரியை தவறி கீழே விழுந்து பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையே நசுங்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அவருடன் இருந்த இரு ஆசிரியைகளும் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பஸ் மற்றும் லொறியின் சாரதிகளை கைதுசெய்துள்ளனர் .
இதேவேளை -
பண்டாரகம பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறுவர்கள் பலியாகினர். அத்துடன் நலவர் காயமடைந்தனர்.
பண்டாரகம - கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல என்ற இடத்தில் டிப்பர் வாகனம் ஒன்றும் ஓட்டோ ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பலியானவர்களில் இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் 
அடங்குகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>