வணக்கம்

செவ்வாய், 15 நவம்பர், 2022

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடத்தின் ஐயப்ப மண்டல விரதம் 15.11.2022

ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப மண்டல விரதம் எதிர்வரும் 15.11.2022 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி தொடக்கம் கணபதி ஹோம வழிபாடுடன் ஆரம்பமாகும் 16.11.2022 ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு விசேட அபிஷேகங்கள் நடைபெற்று காலை 11 மணியளவில் புனித மாலை அ

ணியும் வைபவம் நடைபெறும் ஐயப்பன் அடியார்கள் அனைவரையும் ஆலயம் வருகை தந்து ஐயன் புனிதமான மாலை அணிந்து தொடர்ந்து மண்டல விரதத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடம் சுவிஸ் 
 வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>








சனி, 24 ஜூலை, 2021

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 24.07.21

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா
24-07-2021..இன்று பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.
அம்பாளின்  தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்
அத்துடன், கற்பூரச்சட்டி  , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் நான்கா வது  தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
.ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பாள் துணை 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








ஞாயிறு, 19 ஜூலை, 2020

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 18.07.20

 சுவிட்சர்லாந்துஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா18-07-2020..இன்று 8-45.மணிக்கு  பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.
அம்பாளின்  தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்
அத்துடன், கற்பூரச்சட்டி  , பால்குடம், எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் மூன்றாவது  தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
.ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பாள் துணை 

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>




வெள்ளி, 5 ஜூன், 2020

மணியண்ணருக்கு ஒரு பேரன் கிடைத்துள்ளார்.


ஓம் சக்தி!!04/6 வியாழக்கிழமை (குருநாளில்)
மணியண்ணருக்கு  ஒரு பேரன் கிடைத்துள்ளார்.ஓம் சக்தி!!

மகிழ்ச்சி   வாழ்த்துக்கள்

ஓம் சக்தி
மேல் மருவத்துர்
அம்மன் துணை
நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.அதற்கமைய
 இந்த விடயம் தொடர்பாக அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி இலக்கத்தை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.அதுதவிரவும், இந்த விடயம் தொடர்பாக பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் குழுவிற்கும் அறிவிக்க 
முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக இணையத்தின் ஊடாக
 விண்ணப்பிப்பதற்கான மென்பொருள் ஒன்றை 
பரீட்சைகள் திணைக்களம் அண்மையில் அறிமுகப்படுத்தியது.இதனூடாக உயர்தரப் பரீட்சை வரை விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 8 பிப்ரவரி, 2020

யாழ் நல்லைக் கந்தன் பக்தர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் தைப்பூசம் 08.02.2020 சனிக்கிழமை தைப்பூச உற்சவமானது மாலை 4.45 மணிக்கு வசந்தமண்டபபூஜையுடன்
 ஆரம்பமாகி தொடர்ந்து முருகப்பெருமான் 
வள்ளி தேவசேனா சமேதராக மஞ்சத்தில் வெளிவீதியுலா எழுந்தருள்வார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 20 டிசம்பர், 2019

வறுமையை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஜனவரி 15 முதல் வேலை வாய்ப்பு

வறுமை இல்லாதொழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் ஜனவரி 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தாம் வசிக்கும் பிரதேசத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுடன் மாதாந்தம் 35,000 ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.சுபீட்சத்தின் செட்டிங் நோக்கு கொள்கை பிரகடனத்தை மைய அபிவிருத்தி ஒன்றினை அமைப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றதுமிகவும் வறிய மட்டத்தின் வாழ்ந்துவரும், சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் அது கிடைக்கப் பெறாத குடும்பங்களை கட்டியெழுப்புதல் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் குறிக்கோளாகும்.
இந்த திட்டத்தின் ஊடாக அத்தகைய குடும்பங்களில் தொழில்துறைக்கு பங்களிப்பு வழங்க கூடியவர்களை அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும்.எவ்வித கல்வியையும் பெறாத அல்லது குறைந்த கல்விகத்தகைமை கொண்ட பயிற்றப்படாதவர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் முதலாம் கட்டமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களை வழி நடத்துவதற்கும் முகாமைத்துவம் செய்வதற்கு மேலும் 30,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.சுமார் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு முகாமைத்துவ மற்றும் வெளிக்கள அலுவலர் மட்டத்தில் மேற்பார்வை செய்வதற்கான வேலைவாய்ப்புகளும் இதனூடாக உருவாக்கப்படும்.சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 300- 350 பேர் அளவில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

அவர்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள கல்வித் தகைமைகள் தேவைப்படாத வெற்றிடங்களுக்காக உள்ளீர்க்கப்படுவர். தச்சுத் தொழில், விவசாயம், மீன்பிடி, வனப்பாதுகாப்பு போன்ற துறைகளுக்காக அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த செயற்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.பாதுகாப்பு அமைச்சினதும், முப்படையினரதும் மேற்பார்வையில் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்குதல் இடம்பெறும்.இந்தத் திட்டம் தனது தேர்தல் செயற்பாடுகளின் போது உருவான திட்டமென்பதை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, வினைத்திறனான முறையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். இந்த திட்டத்தின் ஊடாக வறிய குடும்பங்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டு பொருளாதாரரீதியில் வலுவடைவார்கள் எனவும் ஜனாதிபதி
 குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 டிசம்பர், 2019

எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல், மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மணிக்கு 100 மில்லி மீற்றர்களுக்கும் 150 மில்லி மீற்றர்களுக்கும்
 இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் திணக்களம் கூறியுள்ளது.
அதேபோல தெற்கு, ஊவா, வடமத்திய 
மாகாணங்களிலும்,மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களில் வசிக்கும் மக்கள் இடி 
மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பது 
அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை இந்தப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று விடுத்துள்ள விசேட அறிக்கையில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 19 ஜூன், 2019

வழங்கப்படும் விசேட தேவையுடையவர்களுக்கு கொடுப்பனவில் மாற்றம்

விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம்  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா வழங்கப்பட்டது.32 ஆயிரம் பயனாளிகள் இதன்மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது 40,000 பேர் வரை பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.


புதன், 5 ஜூன், 2019

இலங்கையர்களுக்கும் புயலுக்குப் பெயர் வைக்க சந்தர்ப்பம்

வட இந்திய பெருங்கடலில் ஏற்படவுள்ள புயல் காற்றுக்குப் பெயர் வைப்பதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இது தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளையும் கருத்துகளையும் வளிமண்டலவியல் திணைக்களம் 
கோரியுள்ளது.
இதன்படி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் பெயரை குறிப்பிடுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆகையால் விரும்பியவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்கமுடியுமென்றும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மீண்டும் கிழக்கில் 29,04,19, மாலை முதல் ஊரடங்குச் சட்டம்

இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் 
$காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக்
 குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 29 ஏப்ரல், 2019

விசேட அறிவித்தல் பொனி சூறாவளியின் தாக்கம்

 பொனி சூறாவளியானது மட்டகளப்பில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் தற்போது
 நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பொனி 
சூறாவளியின் தாக்கத்தினால், நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ந்துவரும் மணித்தியாலங்களில் நூறு மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம்
 எதிர்வு கூறியுள்ளது.
மேலும், சிலப்பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யக் கூடுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்களுடன் இணைந்துக்கொள்கின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹட் சாலிஹின்.

இங்குஅழுத்தவும் நிலாவரை .கொம் செய்திகள்

சனி, 27 ஏப்ரல், 2019

அரசாங்க வேலை வாய்ப்பு க.பொ.த உயர்தரத்துடன்


இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளர்
 பதவிக்கு வெற்றிடம்*
🌐 *(தகைமை – க.பொ.த உயர் தரத்தில் சித்தி + 6 மாத கணணிக் கற்கை + 2 வருட வேலை அனுபவம்)*
🌐 *(விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)*
🌐 *விபரமாக -* https://goo.gl/rPNfny
🌐 *விண்ணப்ப முடிவுத் திகதி – 05.03.2019*
விண்ணப்ப படிவத்தைப் பெற இங்கே அழுத்துங்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில 
இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
 மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காலநிலை குறித்த விசேட எச்சரிக்கைவடபகுதியில் வாழும் மக்களுக்கு

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3 நாள்கள் பலத்த காற்றுடன் அதிகரித்த மழை பெய்யும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.வங்காள விரிகுடாவில் 
ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வடக்கில் 28 ஆம் 29ஆம் 30ஆம் திகதிகளில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும்.எதிர்வு கூறப்படும் மழை
வீழ்ச்சி 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் ஆக காணப்படுகிறது.ஆகவே வெள்ள மூழ்கடிப்பு நிலை ஏற்படும். சுமார் 
70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.வேகமான காற்றுடன் அதி கூடிய மழை வீழ்ச்சி எதிர் பார்க்கப்படுகின்றது.ஆகவே வடக்கு மாகாண மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
இடர் நிலைமைகளின் போது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் 1990 என்ற நோயாளர் காவு வண்டி சேவை இலக்கத்துக்கும் அழைத்து சேவைகளை பெற்று கொள்ளலாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 24 ஏப்ரல், 2019

வழங்கும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்

பல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவகையில், இந்தியாவுக்கான வீசா வழங்கும் ஐ.வீ.எஸ். லங்கா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு வீசா
 வழங்கும் வீ.எப்.எஸ். குலோபல் வீசா நிலையம் என்பன மூடப்பட்டுள்ளன.
அத்துடன், மலேசியா, தாய்லாந்து மற்றும்
 சீனா ஆகிய நாடுகளுக்கு வீசா வழங்கும் தூதரகங்களுடன் இணைந்து இயங்கும் நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் 
குறிப்பிடப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தொடர் குண்டு வெடிப்புகள் நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றது

1. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்
2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம்
3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம்
4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்
5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல்

6. கொழும்பு, சினமன் கிராண்ட்
7. கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன்
8. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -1
9. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -2

நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர்
 காயமடைந்துள்ளனர்.
இது வரையில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அவற்றுல் இரண்டு ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அனைத்து வடமாகாண சபைக்கு உள்பட்ட அரச அலுவலகங்கள் விடுமுறை

வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால்,22,04,2019 நாளையும் 23,04,2019  நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் 
வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் 22,04,19 நாளை(22) திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 
பணிப்புரை விடுத்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை ஊடரங்கு நடைமுறைக்கு பாதுகாப்பு அமைச்சு

நாடுமுழுவதும் ஊடரங்கு இன்று மாலை 6 மணி தொடக்கம் 
நாளைக் காலை 6 மணிவரை
நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் இன்று காலை 6 இடங்களிலும் பிற்பகல் தெஹிவளை மற்றும் தெமட்டகொடவில் என 8
இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன்இ சமூக வளைத்தளங்களும் 
தடை செய்யப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இலங்கையில் 3 நாட்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையின் பல பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வெப்பமான வானிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும்.
குறித்த பகுதிகளில் பணிகளில் ஈடுபடுபவர்கள், அதிகளவு நீரை அருந்த வேண்டும் என்றும், தங்களது பணியிடங்களில் தேவையான அளவு ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேநேரம், முதியோர்கள் மற்றும் நோய்த்தாக்கம் உள்ளவர்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அத்துடன், குழந்தைகளையும், சிறுவர்களையும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது என்றும் அந்த நிலையம் 
அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அதிக பணிச்சுமையை தவிர்க்குதாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>