வணக்கம்

செவ்வாய், 29 ஜனவரி, 2019

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை இலங்கையின் வானிலையில் திடீர் மாற்றம்

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை சாதாரண நிலையை விடவும் 2 – 4க்கும் இடைப்பட்ட செல்சியஸ் அளவில் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.திணைக்களத்தின் தரவுகளுக்கமைய நேற்றைய தினம் அதிக 
அளவிலான வெப்பம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. அதன் வெப்ப நிலை 35.6 பாகை செல்சியஸாகும்.பகல் நேரத்தில் அதி கூடிய வெப்பநிலை குருணாகல் மற்றும் புத்தளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சாதாரண வெப்ப நிலையை விடவும் 4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது.
துளை, கட்டுகஸ்தோட்ட, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் சாதாரண வெப்ப நிலையை விட 3 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது.மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்ட,
 யாழ்ப்பாணம், மஹ ழுப்பல்லம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் பகல் நேரத்தில் 2 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டுள்ளது.இரவு நேரத்தில் மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்ட, வவுனியா மற்றும் அனுராதபுரத்தில் 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக
$ குறிப்பிடப்படுகின்து.
கொழும்பு, காலி, கட்டுகஸ்தோட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேசத்திலும், இரவு நேரத்தில் பொதுவான வெப்பநிலையை விட 2 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 14 ஜனவரி, 2019

திங்களன்று வடக்கு, கிழக்கு பாடசாலைகள் விடுமுறை

எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் தினம் என்பதால் அதற்கு முதல் நாள் திங்கட்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கும் தகவலை வெளியிட்டுள்ளன.
அதற்குப் பதிலாக அடுத்துவரும் வார இறுதி நாள் ஒன்றில் பாடசாலையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாகாண ஆளுநர் அலுவலகங்கள் கூறியுள்ளன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 13 ஜனவரி, 2019

மின்சாரம் யாழ்.குடாநாட்டின் நாளை சில பகுதிகளில் தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை சனிக்கிழமையும்(12),நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(13) யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி,நாளை சனிக்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரையும் யாழ். வேலணைச் சந்தியிலிருந்து துறையூர் வரை, மடத்துவெளி வல்லான், ஆலடிச் சந்தி, புங்குடுதீவு, இறுப்பிட்டி, 
குறிகட்டுவான், புங்குடுதீவு கடற்படை முகாம், மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், வேலணை ஒரு பகுதி, சோளாவத்தை, மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்டைதீவு
 இலங்கை கடற்படை முகாம், மண்கும்பான் கடற்படை முகாம், விக்னேஸ்வரா வீதி ஆகிய பகுதிகளிலும்,
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(13) காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரையும் யாழின் வசாவிளான்
 ஒரு பகுதி, பலாலி ஒரு பகுதி, நாவாந்துறை, பொம்மைவெளி, காக்கைதீவு, சங்கானை வீதி(அச்சுவேலி) ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளா

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>