வணக்கம்

புதன், 28 செப்டம்பர், 2016

எச்சரிக்கை கடற்பிரதேச மக்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!

நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை கடற்கரைக்கு அருகில் ஆழமான மற்றும் ஆழமற்ற  கடற்பிரதேசங்களில்  காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் தொக்கம் 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிக்கப்பட்டுள்ளது.ஆகவே அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்கள்...

வியாழன், 22 செப்டம்பர், 2016

பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்கலாம் !

எதிர்வரும் தினங்களில் கணிதம், விஞ்ஞானம், வணிகம் மற்றும் கலைத் துறை பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆங்கில மொழி டிப்ளோமா தகைமையுடையோரை ஆங்கில ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவுகின்ற பட்டதாரி ஆசிரியர்களின் வெற்றிடம் தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலே...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

வானில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோன்றிய பிள்ளையார்!

இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு பிரதான வீதியின் மட்டக்களப்பை அண்மித்த பகுதியில் நடு வானில்.05.09.2016..அன்று  பிள்ளையார் வடிவில் மேகம் தோன்றியக் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் நின்று இந்த அற்புத காட்சியை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

தற் போது வடக்கு ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் போலிக் கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து 20 பேர் ஆசிரியர்களாக இணைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டு, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலர் இ. இரவீந்திரன்  தெரிவித்தார். மேலும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நியமனம் பெற்று ஆசிரியர்களாக சேவையாற்றியவர்களே இவ்வாறு இனங்காணப்பட்டனர். சேவைக் காலத்தில் சேவையை நிரந்தரமாக்குவதற்கு சான்றிதழ் உறுதிப்படுத்தல்...

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இடம்பெற்ற இருவேறு கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த ஹயஸ் ரக வாகனத்துடன் கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கிச் பயணித்த இளைஞனின் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இதன் போது இளைஞன் வாகனத்தின் முன்புற கண்ணாடியில் தலைக் கவசத்துடன்...

திங்கள், 5 செப்டம்பர், 2016

அக்கா தங்கைக்கு மட்டக்களப்பில் நடந்த கொடூரம்!!

மட்டக்களப்பு – சித்தாண்டி சந்தணமடு பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மேலுமொரு சிறுமி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சகோதரிகளான இவர்கள் யானை தாக்குதலுக்கு உள்ளான நிலையில், மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு...