வணக்கம்

திங்கள், 27 ஜூன், 2016

வளலாய் பகுதி கடற்கரையில் கஞ்சா மீட்பு! இருவர் கைது

யாழ். அச்சுவேலி- வளலாய் பகுதியில் உள்ள அக்கரை என்ற கிராமத்திற்கு கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 100 கிலோ கேரள கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் கஞ்சா கொண்டு வந்த 2 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளலாய் - அக்கரை கிராமத்திற்கு கடல் வழியாக கஞ்சா கொண்டு வரப்படுகின்றமை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து, அந்த பகுதியில் நள்ளிரவு...

சனி, 25 ஜூன், 2016

வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி

யாழ். ஸ்ரான்லி வீதியில் திடீரென அறுந்து வீழ்ந்த உயரழுத்த மின்கம்பி!- மயங்கிய பெண் யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதி ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகில் உள்ள மின்மாற்றியின் மேலே உள்ள உயரழுத்த மின் கம்பி ஒன்று இன்று மாலை 3.45 மணியளவில் அறுந்து நடுத்தெருவில் விழுந்தது. நிலத்தில் கம்பி அறுந்து விழுந்தவுடன் பாரிய சத்தமும், தீப்பொறிகளும் எழுந்தன. அருகிலுள்ள கடையில் வேலை செய்யும் பெண்ணொருவர் இதனைப் பார்த்து திடீரென அதிர்ச்சி அடைந்து மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு...

வியாழன், 23 ஜூன், 2016

யாழ் கோப்பாயில் இளைஞன் மீது வாள்வெட்டு!!!

வீதியில் நின்ற இளைஞனை முகத்தினை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத இரு நபர்கள் வாளினால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில் கோப்பாயை சேர்ந்த செல்வராசா மதுசன் (வயது என்ற இளைஞனே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு  பதியப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்...

செவ்வாய், 21 ஜூன், 2016

விமானத்திலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்த பயணி!

துபாய் நாட்டிலிருந்து பிரித்தானியா நாட்டிற்கு பறந்த விமானத்தில் பயணி ஒருவர் உடநலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு எமிரேட்ஸ் என்ற விமானம் இன்று காலை பிரித்தானியா நாட்டிற்கு புறப்பட்டுள்ளது. விமானத்தில் கிரேட்டர் மான்செஸ்ட்டர் நகருக்கு பயணமான முதியவர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று உள்ளூர் நேரப்படி...

திங்கள், 20 ஜூன், 2016

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்!!!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 11ம் திருவிழா அன்று ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய கருடன் பறவை ஆலயத்துக்கு மேலாக காட்சி கொடுத்தமை அங்கிருந்த பக்தர்களின் மனதில் ஆனந்தத்தை ஏற்ப்படுத்தியது .11ம் திருவிழா அன்றுமதியம் இந்த சம்பவம் நிகழ்துள்ளது. ஆலயத்தின் வரலாற்றில் கருடனும் பாப்பும் தொடர்பு பட்டுள்ள நிலையில் இன்று இந்த கருட பறவையின் தரிசனம் கிடைத்தமையை அம்பாளின் அற்புதம் என அடியார்கள் தெரிவித்தனர்.. இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம்...

திங்கள், 13 ஜூன், 2016

மனிதன் 325 வருடத்திற்க்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உருவ மற்றம்

சிலவேளைகளில்  மனிதன் 325 வருடத்திற்க்கு பிறகு  கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உருவங்கள் மாற தொடங்குவதன் அறிகுறிகள் உள்ளதாக  ஓர் நிழல் படம் இணைப்பு கவனம் இதை உறுதியாக நம்மமுடியது? இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> ...

புதன், 8 ஜூன், 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் வினாத்தாள்களின் மாதிரி வினாக்கள்

  கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் வினாத்தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் பரீட்சைகளில் முகங்கொடுக்க மிகவும்...

ஞாயிறு, 5 ஜூன், 2016

உங்கள் பேஸ்புக்கில் விரைவில் அட்டகாசமான புதிய வசதிகள் ?

இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன. இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும். ஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம் செய்யவுள்ளது இதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegent) நுட்பத்தினை கையாளவுள்ளது. Facebook Deep Text எனும் குறித்த தேடு பொறியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்...

வெள்ளி, 3 ஜூன், 2016

குடியிருக்கும் தமிழ் மக்களை நாவற்குழியில் அச்சுறுத்துவதாக முறைப்பாடு!

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை அந்த மக்களுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த தாம் அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். நாவற்குழி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான...