வணக்கம்

புதன், 30 மார்ச், 2016

இன்று ஐஸ்கிறீம் விற்பனையாளர்களுக்கு அபராதம்!

சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில், ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எ.எம்.எம்.றியால் இன்று தீர்ப்பளித்தார். சுகாதார பரிசோதகர் பி.சஞ்ஜீவன், நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து, ஐஸ்கிறீம் வானின் சாரதிக்கும் விற்பனையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்...

யாழில் கடும் வெய்யிலுக்கு பின்னர் மழை: மக்கள் மகிழ்ச்சி

யாழில் கடந்த சில நாட்களாக கடும்  வெப்பமான காலநிலையை தொடர்ந்து இன்று மழை  பெய்து வருகின்றது. இன்று  முற்பகல் யாழ்  நகர் பகுதி மற்றும் வலிகாமம் மேற்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. வட பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகளவான வெப்பநிலை காணப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில் இன்று திடிரென மழை பெய்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் மகிழ்சியடைந்துள்ளனர். கடும் வெப்பத்தின்...

சனி, 26 மார்ச், 2016

நான்கு தமிழர்கள் சவூதியில் வதைக்கப் படுகின்றனர்?

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த 4 பேர் சவூதி அரேபியாவில் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை என்று கூறி அவர்களது உறவினர்கள் நாகபட்டினம் ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர். காலைவாணன், ராமன், எபனேசர் லுகாஸ், தாமஸ் ஆகிய 4 பேரும் தாங்கள் அடித்து துன்புறுத்தப்படும் காட்சியை செல்போனில் படம் பிடித்து அதை தங்கள் உறவினர்களுக்கு  அனுப்பியுள்ளனர். ஓட்டுநர் வேலைக்காக சவூதி வந்த தங்களுக்கு கால்நடைகளை வேலை தரப்பட்டதாகவும், அதை...

வெள்ளி, 25 மார்ச், 2016

மாணவி துஸ்பிரயோகம்! அதிபர் கைது

கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை நேர வகுப்பு தொடர்பில் பேச வேண்டும் என்று அழைப்பு  விடுத்திருக்கின்றார். ஆனால் குறித்த மாணவியின்...

புதன், 23 மார்ச், 2016

பெல்ஜியத்தொடர் குண்டுவெடிப்புகள் இது ஐரோப்பா மீதான தாக்குதல்?.

தற்போதைய செய்தி:விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தற்கொலை பெல்ட் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.படுகாயம் அடைந்தவர்களில் பலர் தங்கள் கால்களை இழந்துள்ளனர் . நடைபெற்றுள்ள இரண்டு தாக்குதல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களே என பெல்ஜியத்தின் தலைமை அரச வழக்கறிஞர் கூறுகிறார் இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், ஊகங்களின் அடிப்படையில் சிலர் கருத்துக்களை கூறி வருவதாக பெல்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர்...

திங்கள், 21 மார்ச், 2016

இரண்டு மிதிவெடிகள் யாழில் விசேட அதிரடி படையினரால் மீட்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் காணியொன்றில் இருந்து இரண்டு மீதிவெடிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியில் இருந்த தனியார் காணியொன்றில் இருந்தே மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன குறித்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் இரண்டு நாட்கள் பின்னர் காணியை துப்பரவு செய்யும் போது மீதி வெடியொன்று வெடித்து ஒருவர் காயமடைந்திருந்தார். இந்நிலையிலேயே இன்றைய...

கனரக வாகனம் மோட்டார் சைக்கிள் யாழில் விபத்து! இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியும், வண்ணார்பண்ணைச் சிவன் கோவில் வடக்கு வீதியும் இணையும் சந்தியில் இன்று காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற கனரக வாகன – மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை முடித்து விட்டு தமது இல்லம் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் திரும்பிக்...

சனி, 19 மார்ச், 2016

புதியகருவி வருகிறது சாரதிகளை கைது செய்யவதற்கு?

இலங்கையில் போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்யும் நீண்ட தூர பேருந்து சாரதிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நுகர்ந்துள்ளனரா எனக் கண்டுபிடிப்பதற்காக உடனடி போதைப்பொருள் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வாகனப் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிரி சேனரத்ன  தெரிவித்துள்ளார். இதேவேளை, மதுபானம் அருந்தும் சாரதிகளை மட்டுமே உடனடியாக அறியக் கூடிய கருவிகள் தற்போது நாட்டில் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்குஅழுத்தவும்...

வியாழன், 17 மார்ச், 2016

திடீர் மின் வெட்டு அமுல்-மின்பிறப்பாக்கிக்கு கிராக்கி

யாழில் திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சுய தேவைக்கான மின்பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வசிப்போர் மின்சாரமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.  இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யும் கடைகளில் கடந்த இரு நாட்களாக மின்பிறப்பாக்கிகள் விற்பனை சடுதியாக அதிகரித்துள்ளது....

மாயமான விமானங்களகளின் மர்ம பெர்முடா ரகசியம் வெளியானது (காணொளி)

பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது.பேரன்ஸ் கடல் பகுதியில் புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும்...

புதன், 16 மார்ச், 2016

நான்கு ரவுடிகள்சேர்ந்து வாழ் பாடசாலை சிறுவனுக்கு வெட்டு !

யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் சிறுவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்...

திங்கள், 14 மார்ச், 2016

இரண்டு மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து சிறுமி பலி!

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்வேவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்திலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் குறித்த கட்டடத்தில் சிறுமி மேலும் பலருடன் நின்று கொண்டிருந்த வேளையிலையே கீழே விழுந்துள்ளார்.காயமடைந்த சிறுமி மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக...

சனி, 12 மார்ச், 2016

பல்வேறு பிரச்சினைகளால் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள்!

இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை, உடல்நிலை மாற்றம், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெண்கள் உளநிலை பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள்...

புதன், 9 மார்ச், 2016

மாணவி கடத்திய எதிரிக்கு கடூழியச் சிறை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, இன்று  தீர்ப்பளித்துள்ளார். அத்துடன் 30 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வல்வெட்டித்துறையில்...

வியாழன், 3 மார்ச், 2016

புதிய பணிப்பாளராக முகுந்தன் யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நியமனம்!

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதிய பணிப்பாளராக திரு. முகுந்தன் அவர்கள் இன்று முதல் பணிப்பாளர் நாயகம் திரு. து. யு. ரஞ்சித் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் அதிபராக கடமையாற்றி வந்துள்ளார். வாழ்க்கை திறன் மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்கவும் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகளும் எதிர்வரும் 04.03.2016 அன்று யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நேரடியாக விஜயம் செய்ய இருக்கின்றனர். யாழ்....

செவ்வாய், 1 மார்ச், 2016

இருவர் படுகாயம் பதுளை விபத்தில் ஆசிரியயை பலி;

பதுளை உடுவரை தமிழ் வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் பலியானார். அத்துடன் இருவர் படுகாமயடைந்தனர். டபிள்யூ.எம்.பிரியலதா (வயது 47) என்ற ஆசிரியையே விபத்தில் நடந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்தையடுத்து மக்கள் வீதிக்கு இறங்கி பஸ்ஸை சுற்றிவளைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து பாதுகாப்புக்காக பொலிஸார் களமிறக்கப்பட்டனர். பாடசாலை முடிவடைந்து...