வணக்கம்

வியாழன், 20 செப்டம்பர், 2018

ஓர் நற்செய்தி பாண் விலை மீண்டும் குறைவடையும்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்வரும் சில தினங்களுக்குள் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.அண்மையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் நேற்று (19) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை குறித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முன்னர் இருந்த விலைக்கே குறைத்து தருவதவதற்கு அமைச்சர் சம்மதம் தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பாணின் விலையையும் மீண்டும் குறைக்குமாறு அமைச்சர் வேண்டுக்கொண்டதனை அடுத்,து அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அதற்கு சம்மதம்
 தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

வீடு புகுந்து யாழ் ஊரெழுப்பகுதியில் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த கொள்ளையர்கள்  நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையடித்து சென்றுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தம்பதியைத் தாக்கிவிட்டு, இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் கோப்பாய் ஊரெழுப்பகுதியில் இன்று காலை நடந்துள்ளது.
காயமடைந்த தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 16 ஆகஸ்ட், 2018

திடீரென பலத்த காற்றுடன் யாழில் வீசிய மினி சூறாவளி

யாழில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளது.
அத்துடன், வீடுகளின் கூரைகளும் காற்றினால்
 தூக்கி வீசப்பட்டுள்ளன.
யாழ். குடாநாட்டில் 14.08.2018. மாலை திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தது. வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் மிகவும் அதிகரித்து காணப்பட்டதுடன் கன மழையும் பெய்துள்ளது.
நேற்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த மினி சூறாவளியால் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமாகியுள்ளன.
காரைநகர் கல்லந்தாழ்வு ஐந்தாம் வட்டாரப்பகுதியில் ஒரு வீடு முழுமையாக சேதமாகியுள்ளதுடன் நான்கு வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு பகுதியளவில் சேதமாகியுள்ளன.
அத்துடன் பொன்னாலை குடியிருப்பு பகுதியிலுள்ள மூன்று வீடுகள் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக சேதமாகியுள்ளது.
இதேவேளை இப்பகுதியிலுள்ள மரங்களும் முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
நிலாவரை.கொம் செய்திகள் >>>



தாயும் மகனும் வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் 4 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.$இன்று காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டின் முன்னால் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்
கப்பட்டுள்ளனர்
இது குறித்து முன் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில், எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது சிறுவன் வந்திருந்தான். அதன் பின் குறித்த தாயும் வந்திருந்தார். இருவரும் நன்றாக வழமை போல் என்னுடன் கதைத்தனர். இதன்போது வீட்டில் இருந்த றொட்டியை சாப்பிடக் கொடுத்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் வீட்டில் நிற்கும் போது
 நான் அயலில் இருந்த கடைக்கு சென்று விட்டேன். 10 நிமிடத்தில் திரும்பி வந்து விட்டேன். அப்போது அவர்களை காணவில்லை. சிறிது நேரத்தில் அவர்களது மற்றைய பிள்ளையான 9 வயது சிறுவன் அம்மா நிற்கிறாவா என தேடி வந்தான். இதன்போது அவனுடன் இணைந்து தேடிய போதே குறித்த தாயும் மகனும் கிணற்றில் சடலமாக இருந்ததை கண்டோம்
 எனத்தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராம அலுவலர் மற்றும் பொலிசார ஆகியோர் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 5 செப்டம்பர், 2017

உயிரைக் குடித்த நண்பனுக்கு உயிர் கொடுத்த நண்பன்!

நகைத் தொழி­லாளி ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து நகை வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் பொட்­டா­சி­யம் என்ற திர­வத்தை அருந்தி உயிரை மாய்த்­தார் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
நண்­ப­னின் வியா­பார நோக்­கம் கருதி ஒரு கோடி ரூபா­வுக்­கும் மேற்­பட்ட பணத்­தைக் கட­னா­கப் பெற்று வழங்­கி­யி­ருந்­தார் என்­றும் அந்­தக் கடன் பணத்தை நண்­பன் திரும்­பித் தரா­த­தால் கடன் தொல்­லை­யால் அவர் உயிர் மாய்த்­தார் என்­றும் விசா­ர­ணை­யில் 
தெரி­விக்­கப்­பட்­டது.
யாழ்ப்­பா­ணப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யைச் சேர்ந்த ஒரு­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார்.
“வியா­பார நோக்­கத்­தில் ஒரு கோடியே 17 இலட்­சம் ரூபா பணத்தை கட­னா­கப் பெற்று தனது நண்­ப­னுக்கு நகைத் தொழி­லாளி வழங்­கி­யுள்­ளார்.

குறிப்­பிட்ட காலத்­தின் பின்­னர் கடன் பணத்தை நண்­ப­னி­டம் கேட்­ட­போது, 10 இலட்­சம் ரூபாவை வழங்கி மிகு­திப் பணத்­துக்கு சகோ­த­ர­னின் பெய­ரில் காசோலை வழங்­கி­யுள்­ளார். காசோ­லை­யில் பெயர் குறிப்­பி­டப்­பட்ட சகோ­த­ரன் வெளி­நாட்­டுக்கு சென்­று­விட்­டார்.
இந்த நிலை­யில் குறித்த குடும்­பத்­த­லை­வர் கடந்த 31ஆம் திகதி தன­து­வீட்­டில் தவ­றான முடிவு எடுத்து நகை வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் பொட்­டா­சி­யத்­தைக் குடித்­துத்­துள்­ளார்” என்று இறப்பு விசா­ர­ணை­யில்
 தெரி­விக்­கப்­பட்­டது.
அவர் சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். சிகிச்சை பய­ன­ளிக்­காது அவர் நேற்று உயி­ரி­ழந்­தார்.
மருத்­து­வு­ம­னை­யின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் மற்­றும் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 5 ஆகஸ்ட், 2017

இலங்கையில் ஆறு மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்

இந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து  நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது.
இதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூற்றி அறுபத்தி ஏழு சுற்றுலாப் பயணிகளே வருகைத்தந்து இருந்ததாக அச்சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த 6 மாதக் காலப்பகுதியில் எமது அண்டை நாடான இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி இந்தியாவிலிருந்து 1 இலட்சத்து 72 ஆயிரத்து எண்ணூற்றி தொன்னூற்றி நான்கு சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 1 இலட்சத்து 34 ஆயிரத்து எழுநூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாபயணிகள் 
வருகை தந்துள்ளனர்.
ஆனால் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதக் காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. காரணம் இக்காலப்பகுதில் நாட்டில் டெங்கு தொற்று நோய் அதிகரித்து இருந்தமை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்​டிருந்தமை என, 
அச்சபை தெரிவித்தது.
இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தரச் செய்வதே எமது இலக்காகும். ஆனால் அந்த இலக்கை அடைவது கஸ்ட்டம் என, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 25 மே, 2017

விபத்தில் 7 பிள்ளைகளின் தாயார் பரிதாபச் சாவு!!!

யாழ்ப்பாணத்தில் நடந்த இறப்பு வீட்டுக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்த 7 பிள்ளைகளின் தாய்க்கு அவரது மகனின் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளே எமனாக மாறிய சம்பவம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் நேற்று இடம்பெற்றது என்று பொலிஸார் 
தெரி­வித்­­த­னர்.
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் ரம்பை (வயது 51) என்ற 7 பிள்ளைகளின் தாயாரே விபத்தில் உயிரிழந்தவராவர்.
“யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டுக்குச் செல்வதற்காக குடும்பப் பெண் காலை 8 மணியளவில் பேருந்துக்காக புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் இருந்த சிமெந்துக் கட்டு மேல் உட்கார்துள்ளார். 
அந்த வேளை அந்தப் பெண் இருந்த கட்டுக்கு நேர் எதிராக இருந்த ஒழுங்கையின் ஊடாக அவரின் மகன் மோட்டார் சைக்கிளில் முதன்மை வீதியில் வந்து ஏறியுள்ளார். முதன்மை வீதியால் பயணித்த  முச்சக்கர வண்டியும் அவரின் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு 
விபத்துக்குள்ளாகின.
விபத்தால் நிலைகுலைந்த முச்சக்கரவண்டி மதிலில் உட்காருந்திருந்த பெண்ணின் மீது மோதுண்டது.
விபத்தில்  படுகாயமடைந்த குடும்பப் பெண்  உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு 
செல்லப்பட்டார். 
எனினும் போதனா வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பபட்டது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பான போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் மகனையும், முச்சக்கர வண்டிச் சாரதியையும் கைது செய்தனர்.
“விபத்தில் சிக்கிய மோட்டர் சைக்கிள் புதியது. அதற்கான இலக்கத்தகடுகூட வழங்கப்படவில்லை.மோட்டர் சைக்கிளைச் செலுத்தியவருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை ” என்று பொலிஸார் 
தெரிவித்தனர்.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>