வணக்கம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தரம் 5 பரீட்சை முடிவுகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேசிய ரீதியில் இன்று இப்பரீட்சை நடைபெற்று முடிந்தது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு நாட்டின் சகல பாகங்களிலும் பரீட்சை நிறைவடைந்தது. இப்பரீட்சையின் சகல விடைத்தாள்களும் இன்று நள்ளிரவாக முன்னர் கொழும்பிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்தை வந்தடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த மாதம் 3 ஆம் திகதி முடிவடையவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

குழுவினர்வாள்வெட்டில் குடும்பஸ்தர்யாழில் பலி

இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - சங்குவேலியில் நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவகுமார் பிரணவன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவராவார்.
 நேற்றிரவு வீட்டின் முன்னால் நின்றிருந்தவரை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு வாளால் வெட்டியது. இதில் அவர் தலை, கழுத்து, கை, கால் பகுதிகளில் கடும் காயங்களுக்கு இலக்கானார். உறவினர்களால் காப்பாற்றப்பட்ட அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமானார். மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபரை கொக்குவிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலைமையிலான குழுவே வாளால் வெட்டியது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் ரவுடித்தனம், வாள்வெட்டுப் போன்ற குற்றச் செயல்கள் கட்டுக்குள் இருந்தன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் யாழ். மக்களிடையே மீண்டும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கம்பியால் முதியவரை தாக்கி சங்கிலி கொள்ளை

யாழ்ப்பாணம், அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், குடும்பஸ்தரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து
 சென்றுள்ளனர்.
இன்று(புதன்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ்.வீ. சமன்குணதிலக,
 தெரிவித்துள்ளார்.
இதன்போது கந்தசாமி மார்க்கண்டேயர் வயது(72) என்ற முதியவரே தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு பொலிஸார், தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

உடுவில் பகுதியில் தொற்று நோய் பரவல் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

யாழ். உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளான நாய்கள் கடந்த இரண்டு மாதங்களாக ‘பாவோ’ நோய்த் தொற்றின் தாக்கத்துக்கு இலக்காகி வருவதாக உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.சி. விமலகுமார்
 தெரிவித்துள்ளார்.
பாவோ நோய் வைரஸ் மூலம் பரவும் ஒரு வித நோயாகும். குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்கான நாய்க்கு ஆரம்பத்தில் உணவில் நாட்டமிருக்காது. பின்னர் கடுமையான வாந்தி, வயிற்றோட்டம், இரத்தத்துடன் வயிற்றோட்டம் அல்லது நீரிழப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
கடந்த இரண்டு மாதத்தில் மாத்திரம் ‘பாவோ’ நோய்த் தொற்றுக்கு இலக்கான 30ற்கும் மேற்பட்ட நாய்களுக்கு எம்மால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. பல நாய்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாததன் காரணமாக உயிரிழந்திருக்கின்றன எனவும் எஸ்.சி. விமலகுமார் 
தெரிவித்துள்ளார்.
மேலும், வருடாந்தம் இந்த நோய் உருவாகுவதைத் தடுப்பதற்கான தடுப்பூசியை ஏற்றிக் இந்த நோயைத் தொற்றலை தடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் நாய்கள் உயிரிழப்பதை 
குறைத்துக் கொள்ள முடியும்.
எனவே, எமது கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பகுதிகளுக்குற்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் இந்த நோய்த் தொற்று தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் வைத்திய அதிகாரி எஸ்.சி. விமலகுமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

விமானம்கடைசி நிமிடத்தில் வெடித்த! பயணியின் திகில் அனுபவம்


எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயில் அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பயத்தில் 
அலறி துடித்தனர்.
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ’போயிங்’ ரக விமானம் இன்று 282 பயணிகள் மற்றும் 18 விமான குழு என 300 பேருடன் துபாய்க்கு சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறங்க அனுமதி கேட்டார்.
இதனையடுத்து அந்த விமானத்திற்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. விமானம் துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் பயங்கர சப்தத்துடன் மோதி தரையிறங்கியது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

ஊர்காவற்றுறை நாரந்தணை பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை முதல் காணாமற்போயிருந்த நிலையிலேயே, இன்று வெற்றுக் காணியிலுள்ள மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவனின் இறப்பு தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைகளை மேற்கொண்டார்.
சரவணை மேற்கு 1 ஆம் வட்டாரப் பகுதியிலுள்ள வேலணை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்ற தவிசாலன் பானுசன் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
அத்துடன், தடய அறிவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நீதிவானின் உத்தரவுக்கமைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 
பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

வெளிநாட்டுச்சுற்றுலாப் பயணி ஆரியகுளம் பகுதியில் படுகாயம்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் படுகாயமடைந்த நிலையில் (29) யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் வெளிநாட்டு பிரஜைகளான சுற்றுலா பயணிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளனர்.
அதன்போது, அவர்களுக்கு மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள்  வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.
இந்த விபத்தில் சுற்றுலா பயணியான பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.