வணக்கம்

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல், மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மணிக்கு 100 மில்லி மீற்றர்களுக்கும் 150 மில்லி மீற்றர்களுக்கும்
 இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் திணக்களம் கூறியுள்ளது.
அதேபோல தெற்கு, ஊவா, வடமத்திய 
மாகாணங்களிலும்,மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களில் வசிக்கும் மக்கள் இடி 
மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பது 
அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை இந்தப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று விடுத்துள்ள விசேட அறிக்கையில்
 குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக